அரசியல் கட்சி ஓர் அறிகம்

அரசியல் கட்சிகள் ஓர் அறிகம் 
  • ஜனநாயக ரீதியான எண்ணக்களுள் முதன்மை மிக்கது.
  • ஆட்சியியலினை கொண்டு நடத்திகின்ற ஓர் கருவி எனலாம்.
  • ஜனநாயகத்தில் இருந்து பிரிக்க முடியாத இவ்வம்சம் நீண்டகாலவளர்ச்சியியை கொண்டது.
  • 19 ம் நூற்றாண்டுகளில் ஐரோப்பிய மற்றும் அமேரிக்க நாடுளுக்கு பரவலடைந்தது.
  • 20 ம் நுற்றாண்டுகளில் ஆசிய, ஆப்பிரிக்க, லத்தீன் அமேரிக்க நாடுகளுக்கு பறவலடைந்தது.
Full Notes - Download Click hear

அரசியல் கட்சி தொடர்பான வரைவிளக்கணங்கள் பின்வருமாறு

  • சுருக்கமாக கூறுவதாயின் அதிகாரத்தை கைப்பற்றுவதை நோக்கமாக கொண்ட ஓர் அமைப்பாகும்.
  • விரிவாக கூறின் தங்களிடமிருந்து வேறுபட்ட கூட்டங்களோடு போட்டியிட்டு ஒரு அங்கமாக பணிபுரிந்து மக்களின் வாக்குரிமையை அதிகாரத்தை பெற்று தங்களது கொள்கையினை எத்தனைக்கு நினைக்கும் ஒர் அமைப்பு எனலாம்.

அரசியல் கட்சி முறைமைகள் சில பின்வருமாறு

  •  ஒரு கட்சி முறை.
  • இரு கட்சி முறை. 
  • பல கட்சி முறை.
  • ஆதிக்கமுள்ள தனிக்கட்சி.
  • ஆதிக்கமுள்ள இரு கட்சி.

ஒரு கட்சி முறை

      ஒரு நாட்டில் ஒரே ஒரு அரசியல் கட்சி செயற்படுவதை குறிக்கும் பெரும்பாலும் சோசலிச, இராணுவாட்சி நிலவும் நாடுகளில் காணப்படும்.
உதாரணம்
  • முன்னாள் சோவியத் ஒன்றியம், கியுபா, வடகொரியா, வியட்நாம்.

    இரு கட்சி முறை.

    ஒரு நாட்டில் 2 அரசியல் கட்சிகள் மட்டும் மாரி மாரி ஆளும் கட்சியாகவும் எதிர்க்கட்சியாகவும் செயற்பட்டால் அது இரு கட்சி முறைமையாகும். இரு கட்சிகளுமே ஆட்சியில் செல்வாக்கு மற்றும் பாதிப்பு செலுத்தும்.
      உதாரணமாக.
      • அமெரிக்கா 
      • அவுஸ்திரேலியா

        பல கட்சி முறை

          ஒரு அரசியல் முறைமையில் இரண்டுக்கு மேற்பட்ட பிரதான அரசியல் கட்சிகள் செயற்படுமாயின் அது பல கட்சி முறை என்பர்.
            உதாரணம்.
            • பிரான்ஸ், சுவிடன்
            •  சுவிட்சர்லாந்து

              ஆதிக்கமுள்ள தனிக்கட்சி.

                ஒரு அரசியல் முறைமையில் இரு கட்சி அல்லது பல கட்சியும் அரசாங்கத்தை கைப்பற்றி ஆட்சி செலுத்கின்ற போது அவற்றுள் ஒரு கட்சியினுடைய ஆதிக்கம் அதிகமாக காணப்பட்டால் அது ஆதிக்கமுள்ள தனிக்கட்சி எனப்படும்.
                  உதாரணம்.
                  • இரண்டாம் உலக மகா யுத்தத்தின் பின் சில காலங்கள் பிரித்தானியா.

                    ஆதிக்கமுள்ள இரு கட்சி

                      ஒரு நாட்டில் இரண்டு பிரதான கட்சிகள் மாறி மாறி தங்களது தலைமையின் கீழ் இரு கட்சிகளும் கூட்டுச்சேர்ந்து ஆட்சி அமைக்கின்ற நிலைப்பாடு.
                        உதாரணம்
                        • இலங்கை

                          அரசியல் கட்சிகள்

                          • இடதுசாரி, வலதுசாரி கட்சி.
                          • பொதுசன அபிப்பிராயத்தை திரட்டும் கட்சிகள் மற்றும் பொதுசன அபிப்பிராயத்தை பிரதிபலிக்கும் கட்சிகள்.
                          • யாப்பு ரீதியான அரசியல் கட்சிகள் மற்றும் புரட்சிகர அரசியல் கட்சிகள்.
                          • மகாஜன கட்சி, காடர் கட்சி.

                            இடதுசாரி, வலதுசாரி கட்சி.

                              முதலாளித்துவ சிந்தனைகள் பிரபுக்களை பின்பற்றும் கட்சிகள் வலதுசாரிக் கட்சிகள் ஆகும்.
                              • உதாரணமாக கூறுவதாயின் ஜக்கிய தேசியக் கட்சி, ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி என்ற இரண்டு கட்சிகள் குறிப்பிட முடியும்.
                              • தொழிலாளர் நலன், சோஷலிச சிந்தனை அடிப்படையில் இயங்கும் கட்சிகள் இடதுசாரி கட்சிகள் ஆகும்.
                              உதாரணம் - 
                              • லங்கா சமசமாஜ கட்சி.
                              • பொதுசன அபிப்பிராயத்தை திரட்டும் கட்சிகள் மற்றும் பொதுசன அபிப்பிராயத்தை பிரதிபலிக்கும் கட்சிகள்.
                              • மக்கள் மத்தியில் எழுகின்ற பொதுசன அபிப்பிராயங்களை ஒன்றிணைக்கும் கட்சிகள் பொதுசன அபிப்பிராயத்தை திரட்டும் கட்சிகள் ஆகும்.
                              உதாரணம் 
                              • JVP - இலங்கை 
                              • ஐனதா கட்சி - இந்தியா.
                              • மக்கள் மத்தியில் பொது கருத்துக்களை உருவாக்கி அவற்றை பொதுசன அபிப்பிராய வடிவில் ஏற்றுக்கொண்டு அதனை பிரதிபலிக்கும் கட்சிகள் பொதுசன அபிப்பிராயத்தை பிரதிபலிக்கும் கட்சிகள் எனலாம்.

                                யாப்பு ரீதியான அரசியல் கட்சிகள் மற்றும் புரட்சிகர அரசியல் கட்சிகள்.

                                • ஒரு அரசியல் யாப்புக்கு ஏற்றவாறு திட்டமிட்ட அஇப்படையில் உருவாக்கப்பட்டு இயங்கிவரும் அரசியல்யாப்பு ரீதியான கட்சிகள் ஆகும்.
                                உதாரணம்
                                • ஐக்கிய தேசிய கட்சி (SL), 
                                • குடியரசுக்கட்சி (USA).

                                • குறித்த ஓர் இனத்தின் விடுதலைக்காக ஒரு, அமைப்பாக தோற்றம் பெற்று பின்னர் அரசியல் கட்சி வடிவம் ஒன்றினை பெற்றுக்கொள்வதை புரட்சிகர அரசியல் கட்சியாகும்.
                                உதாரணம் 
                                • sri lanka (JVP)

                                  மகாஜன கட்சி, காடர் கட்சி

                                  • பரந்த மக்கள் தளத்துடன் உறுப்பினர்களின் சந்தாவில் செயற்படுகின்ற முறையான ஒழுங்கமைப்பினை கொண்ட கட்சிகள் ஆகும்.
                                  உதாரணம் 
                                  • குடியரசுக் கட்சி, 
                                  • ஜனநாயக கட்சி.

                                  • உயர் குழாம் வகுப்பினரால் ஒழுங்கமைக்கப்பட்டு அவர்களின் நிதி உதவியோடு செயற்படுகின்ற, தேர்தல் காலங்களில் செயற்படுகின்ற கட்சிகள் காடர் கட்சிகள் ஆகும்.

                                  அரசியல் கட்சிகளின் பணிகள்.

                                  • சிதரியுள்ள அபிப்பிராயங்களை ஒன்று திரட்டல்.
                                  • மக்கள் அபிப்பிராயத்தை அரச மட்டம் வரை கொண்டு செல்லல்.
                                  • மக்களின் அரசியல் அறிவை வளர்த்தல்.
                                  • வாக்காளர்களுக்கு அறிவூட்டல்
                                  • அரசியல் தலைவர்களுக்கு பயிற்சி வழங்குதல்.
                                  • ஜனநாயகத்தை பாதுகாக்க.
                                  • பொதுநலப்பணியை மேற்கோளளல்.
                                  • கருத்து தரகராக செயற்படல்.

                                  Full Notes - Download Click hear